சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்

(UTV|COLOMBO)  புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்று இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேநேரம், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

இன்று 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை