சூடான செய்திகள் 1

காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடும்

(UTV|COLOMBO)-கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

 

 

 

Related posts

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிவாரணம்

அர்ஜூன் அலோசியஸிடம் வாக்குமூலம் பதிவு

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை