வகைப்படுத்தப்படாத

கார் வெடித்து சிதறி 3 பேர் தீயில் கருகி பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பொலிசார் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

கார் வெடித்து சிதறியது எப்படி? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ

பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்