சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி..

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்க விஷேட மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணைக்காகவே அவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று (24) சென்றுள்ளார்.

குறித்த வழக்கை விசாரணை செய்த விஷேட மேல் நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை

பாதசாரிகள் கடவையால் பாதையை கடந்த சிறுமி விபத்தில் பலி

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு