உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி அக்ஸா பள்ளிவாயலில் புகைப்பட சர்ச்சை நடந்தது என்ன?

புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் (அல் அக்ஸா) இல் எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட புகைப்பட விவகாரம்.! உண்மையில் நடந்தது என்ன?

நேற்றைய தினம் புதன்கிழமை (25)முகநூலில் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் முன்பாக எடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு பல்வேறு விமர்சனங்கள் பகிரப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று விசாரித்த வகையிலும் இப் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்த மட்டக்களப்பு Mathumi Beauty Care நிறுவனத்தின் தகவலின் அடிப்படையிலும் விமர்சனத்திற்க்குள்ளான புகைப்படம் கணினி வடிவமைப்பு செய்யப்பட்டது என்றும் புகைப்படம் எடுப்பதற்க்கு பள்ளிவாயல் உள்ள அனுமதி கிடைக்கவில்லை என்றும் பதிவு செய்து சில மணிநேரத்தில் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவு தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற புகைப்படம் எடுப்பதற்க்கு எச் சந்தர்பத்திலும் பள்ளி வாயலுக்குள் அனுமதி வழங்குவதில்லை. பார்வையாளர்கள் விடயத்தில் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவ்தாகவும் இன்னும் சில கட்டுப்பாடுகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகவும் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

மேலும் பள்ளிவாயல் என்பது இறைவனை வணங்குகின்ற மகத்துவம் மற்றும் கண்ணியமாக பார்க்கப்பட வேண்டிய மதிக்கப்பட வேண்டிய இடமாகும் அந்த விடயத்தில் பள்ளிவாயல் நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்கிறது.

இவ்வாறான விடயங்கள் மற்றும் விமர்சனங்களை பதிவு செய்பவர்கள் அல்லது பகிரங்கப்படுத்துபவர்கள் மிகவும் பொறுப்போடு விசாரித்து உண்மையை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லல் வேண்டும்.

இறையில்லத்தின் கெளரவத்தை பாதுகாப்பது நம் எல்லோருக்கும் கடமை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ள்ளப்பட்டது.

-எம்.பஹத் ஜுனைட்

Related posts

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

editor

ஜனாதிபதி இன்று மாத்தறைக்கு

தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை