உள்நாடு

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் பெண் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், 109 தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாகிறது

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !