சூடான செய்திகள் 1

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க ஆயத்தம்

(UTV|COLOMBO)  போதைப்பொருள் வர்த்தகரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு செயலாளரின் அனுமதியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

சந்தேக நபர், கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சன டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக வழங்கப்பட்ட 90 நாட்கள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதற்கமைய மேலும் 90 நாட்கள் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த எதிர்பார்ப்பதாக கொழும்பு குற்றதடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை

புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் கைது

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது