உலகம்

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். கட்டார் இதற்கான ஏற்பாட்டை செய்தது. விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல் இஸ்ரேலுக்கு கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தாது.

அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படு இருக்கிறார்கள். முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிணைக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இருக்கிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் பயணிகள் விமானத்துடன் இராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்து

editor

தென் கொரிய ஜனாதிபதி கைது

editor

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு