வகைப்படுத்தப்படாத

கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

கழிவு முகாமைத்துவத்தின் போது உள்ளுராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தார்கள். கழிவு முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் வழங்கவேண்டிய அறிக்கைகளை துரிதமாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொலித்தீன் தடை பற்றிய புதிய வர்த்தமானியை துரிதமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். புத்தளம் அறுவாக்குளம் கழிவகற்றும் பிரதேசத்தின் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இலங்கையில் காணப்படும் குப்பை மேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாடு பூராகவும் கழிவகற்றும் 200 பிரதான இடங்கள் காணப்படுகின்றன. இதில் 25 இடங்கள் மேல் மாகாணத்தில் இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இருபது குப்பை அகற்றும் இடங்களில் மாத்திரமே இந்தப் பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

Related posts

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணி நீக்கம்

ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்