உள்நாடுசூடான செய்திகள் 1

களுபோவில போதனா வைத்தியசாலை; வார்ட் தொகுதி திறப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – களுபோவில போதனா வைத்தியசாலையில் மூடப்பட்டிருந்த வார்ட் தொகுதி இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இரண்டு வாரங்களின் பின்னர் இன்று (15) திறக்கப்பட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் இரு வாரங்களுக்கு முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, 15 நோயாளர்களும்  வைத்தியசாலை பணியாளர்கள் 20 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பணியாளர்களும், தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்துகொண்டு இன்றையதினம் (15) பணிக்குத் திரும்பியுள்ளதாக, வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

Aeroflot விமான விவகாரம் : இலங்கை தூதுவருக்கு ரஷ்ய அரசு எதிர்ப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்த வாரமளவில்

லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்திருக்கும் பங்குகள் திறைசேரிக்கு!