சூடான செய்திகள் 1

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

(UTV|COLOMBO)  களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் 12 அரை மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவை , வஸ்கமுவ , களுத்துறை – வடக்கு மற்றும் தெற்கு , கட்டுகுருந்த , நாகொடை , பேருவல , அளுத்கம , தர்கா நகரம் , மற்றும் பெத்தொட ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி, பயாகல , பிலமிநாவத்த போம்புவல , மக்கொன , களுவாமோதரை மற்றும் மொரகொல்லை போன்று பிரதேசங்களுக்கு நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து