வகைப்படுத்தப்படாத

களிமண் குழிக்கு பலியான 11 வயது சிறுமி

(UDHAYAM, COLOMBO) – தங்கொடுவ – மெடிகோடுவ பிரதேசத்தில் களிமண் குழியொன்றில் நீராட சென்ற 11 வயது சிறுமியொருவர் அதில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சுப்பரமணியம் நிலக்‌ஷி என்ற தங்கொடுவ தாபரகுளிய பிரதேசத்தை சேர்ந்த ஓடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பமொன்றின் நான்காவது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 5 பிள்ளைகள் இந்த களிமண் குழியில் நீராட சென்றுள்ள நிலையில் அதில் இருவர் நீரிழ் மூழ்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசவாசிகள் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ள நிலையில் , அதில் கவலைக்கிடமாக இருந்த குறித்த சிறிமியை தங்கொடுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் சிறுமி மாரவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த பகுதியில் இதற்கு முன்னர் 4 பேர் உயிரிழந்துள்ளாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ காவற்துறையினர ்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

வீதியில் நடமாடும் மன நோயாளர்களுக்காக புதிய நலன்புரி திட்டம்

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles