உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களையும் வழமையை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் முதல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதங்கள் அனைத்தும் மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி இயக்குனர்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

ஒரு மணி நேர மின் வெட்டு இரத்து