உள்நாடுவிளையாட்டு

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.

(UTV | கொழும்பு) –

முதலாவது சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப்- 2023 போட்டியின் சர்வதேச சிரேஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்கள் (400 m Hurdles,100 m Hurdles) தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார்.

கடந்த 19, 20ந் திகதிகளில் தியகம சர்வதேச மைதனத்தில்  நடைபெற்ற இப்போட்டியில் குறித்த வெற்றிகளை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத்  பெற்றுள்ளார். இவகுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று (28) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் இடம் பெற்றது. இங்கு பாராட்டு சான்றிதழினை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட குழுவினர் வழங்கி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில், பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.எம். ஜபீர், உதவிக் கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) யு எஸ் எம் சஜித், கோட்டக்கல்வி அதிகாரி  (கல்முனை தமிழ்) யு.எல்.ரியால், கோட்டக்கல்வி அதிகாரி (சாய்ந்தமருது) என்.எம்.ஏ.மலீக் ஆகியோருடன் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

பயணச் சீட்டு வழங்காததால் பஸ் நடத்துனர் பணி நீக்கம் – பயணியை தூற்றியதாகவும் முறைப்பாடு

editor

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!