உள்நாடுசூடான செய்திகள் 1

கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு – ஒருவர் கைது

கல்கிசையில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்கிசை – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கல்கிசை, சிறிபால மாவத்தையில் வைத்து குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றுமொருவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

இன்றும் வழமைபோல் மின்வெட்டு