வகைப்படுத்தப்படாத

கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று..

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று முதல் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது.
அதனை அடுத்து கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர், மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முன்தினம் நீக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கைத்தொழில் உற்பத்திச் சுட்டென் 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு

கால நிலை

Light showers expected in several areas today