உலகம்

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா

(UTV|அமெரிக்கா) -கலிபோர்னியா டிக்டாக் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தனியுரிமை பாதுகாப்பு காரணத்திற்காக டிக்டாக் செயலியை தடைசெய்ய அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டி சீனாவின் டிக்டாக் உட்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க உள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் தடைவிதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.

ஆனால் நாங்கள் எந்தவிதமான பயனாளர்களின் விவரங்களை சேகரித்து யாருக்கும் கொடுக்கவில்லை, தனியுரிமை பாதுகாப்பு நடவடிக்கையில் மிகவும் அதிகப்படியான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே தடையை எதிர்த்து வழக்கு தொடர ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள டிக்டாக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் டொனால்ட் டிரம்ப் முடிவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை கையாள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியா டிக்டாக் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Related posts

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox

கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்