உலகம்

கலிபோர்னியா மீண்டும் முடக்கம்

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கலிபோர்னியாவில் புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறையை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல வணிகங்கள் மூடப்படுவதோடு, மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே யாரையும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளின் பற்றாக்குறையின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15,169,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 288,984 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

WHO உடன் கூட்டு சேர்ந்தே சீனா வைரஸினை பரப்பியது

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை உயர்வு

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்