உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் பாரியளவான இஞ்சித் தொகையுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இன்று (01) காலை கற்பிட்டி பொலிஸ் பிரிவில் கந்தகுடாவ கற்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 1,839 கிலோ கிராம் இஞ்சி தொகை மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மதுரங்குளி மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த 18, 34, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா ஐ.நாடுகள் சபையிடம் உறுதி

editor

அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிக்கு எதிராக 1,640 பேர் கையெழுத்திட்ட விசேட அறிவிப்பு

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க்