உள்நாடு

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு (21) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது