கேளிக்கை

கரீனா கபூரின் குழந்தையை கவனிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.
குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் இருந்து கடைசியாக இந்த பெண்ணை தேர்வு செய்து இருக்கிறார். அவருக்கு மாதத்துக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் பேசி உள்ளார்.
ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும். இதற்காக சம்பளம் தவிர்த்து சிறப்பு அலவன்சும் நிறைய கொடுக்கிறார்.
படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கரீனா வீட்டுக்கு வந்ததும் அந்த பெண் அவரது வீட்டுக்கு செல்ல தனியாக காரும், டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி செய்துகொடுத்து இருப்பது ஆச்சரியமாக தெரியலாம். ஆனால் பிரபலங்கள் வீடுகளில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்