உள்நாடு

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி பிரதிவாதி வசந்த கரன்னாகொட மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை முன்வைத்தார்.

2008 ஆம் ஆண்டில் 5 மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு