உள்நாடு

கம்மன்பில குழுவினர் நாளை பிரதமரை சந்திக்க உள்ளனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 சுயேச்சைக் கட்சிகள் அடங்கிய குழு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நாளை மாலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதேவேளை, பல கட்சிகளுடன் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான பெயர் குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

உருமாறிய கொரோனா : 02 முகக்கவசங்களை பயன்படுத்தவும்