உள்நாடு

கம்பஹாவில் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

(UTV | கொழும்பு) – கம்பஹாவில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா, கிரிந்திவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரியா மல்வதுஹிரிபிடிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல மற்றும் யக்கல ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திவுலபிட்டிய, மினுவாங்கொடை மற்றும் வேயங்கொட ஆகியவற்றுக்கு ஏலவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்

தனிமைப்படுத்தலை இலவசமாக வழங்க பத்து தனியார் ஹோட்டல்கள்