உள்நாடு

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

(UTV |  கம்பஹா) – சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் கோளாறு

எனக்கு உதவாத அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் – ஆவேசப்பட்ட அலி சப்ரி ரஹீம்!

தப்பிக்க முயற்சித்த கொலைக் குற்றவாளி கைது!