உள்நாடு

கம்பளை பாடசாலை மரம் முறிந்து விழுந்த சம்பவம் | இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு !

(UTV | கொழும்பு) –  கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ தினத்தன்று உயிரிழந்தார்.

அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குறித்த இரண்டு சிறுவர்களில், கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உணவுப் பொருட்களை பகிர்ந்தளிப்பது தொடர்பிலான சுற்றுநிரூபம் வெளியீடு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்