உள்நாடு

கனமழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன, மேலும் கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாதுருஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊவா பரணகமவின் கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக தோட்ட குடியிருப்பு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு

ரயில் கட்டணம் அதிகரிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!