உலகம்

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா

(UTV|கனடா ) – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார், அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

கனடா பொலிஸார் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தல்