உள்நாடு

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் – அச்சத்தில் மக்கள்.

(UTV | கொழும்பு) –

தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று காலை 7 மணியளவில் 109,450 ஏக்கர் அடியாகப் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் சந்தர்ப்பத்தில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என கந்தளாய் பிரதேச நீர்ப்பாசான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கந்தளாய் பிரதேச செயலக பகுதி மக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

பெர்பெர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு