உள்நாடு

கந்தகாடு கைதியின் மரணம் தொடர்பில் 04 இராணுவத்தினர் கைது

(UTV | பொலன்னறுவை) – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றிய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைதிகளை கொடூரமாக தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சில மூங்கில் தாள்கள் மற்றும் தடிமனான மின்சார கம்பிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் சடலம் அவரது இளைய சகோதரர் மற்றும் நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்