உள்நாடு

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV|கொழும்பு) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கணக்காய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

நேற்று(02) முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்திருந்தது.

கணக்காய்வு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இதுவரை கணக்காய்வு சேவை ஸ்தாபிக்கப்படவில்லை என்பதன் காரணமாக கணக்காய்வு அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் எச்.எம்.கே ஹேரத் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இயல்புநிலை தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு