உள்நாடு

கட்டுநாயக்காவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கட்டுநாயக்காவில் இன்று (08) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

51 வயதுடைய சீதுவை பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி விழுந்து விபத்துக்கயுள்ளக்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

editor