உள்நாடு

மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரதேசம் முழுவதும் பரவியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!