உள்நாடு

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் பயணிப்போருக்கு மறு அறிவித்தல் வரையிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் திங்கட் கிழமை அரச மற்றும் வர்த்தக விடுமுறை [UPDATE]

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!