உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

(UTV|கொழும்பு)- கட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை(26) அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால், எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு – கொழும்பு மரண விசாரணை அதிகாரி.

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’