உள்நாடு

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுக்கான கட்டணத்தை தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் உட்பட ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் எமது நிலைப்பாட்டை விளக்கப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில், அமைச்சர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினருடன், அனைத்து சங்கங்களும் இணைந்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

மேல் மாகாண ஆளுநராக எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க நியமனம்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய மேலும் 16 பேருக்கு தொற்று