அரசியல்உள்நாடு

கட்சி சார்ந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும் – அனுஷா சந்திரசேகரன்

அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் மற்றுமொரு கிளை காரியாலயம் நானு ஓயா நகரில் பொலிஸ் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது முன்னணியின் தோட்டக்கமிட்டி தலைவர்கள், பிரதேச பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்த தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்,

“எமது மலையகத்தில் ஊடறுத்து காணப்படும் கட்சி சார்ந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும்.

அனைவரும் ஒரு சமமாக நடாத்தப்பட வேண்டும், அதன் ஆரம்ப கட்டமாக எந்தவொரு கட்சி தொழிற்சங்க பேதமின்றி அனைவருக்கும் சேவை செய்யும் இடமாக எமது காரியாலயங்கள் இருக்க வேண்டும், எந்த கட்சியினராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகள் எனும்போது அதற்கு எம்மால் முடிந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம்” என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த தொழிற்சங்கம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்க பட உள்ளது.

Related posts

தாம் நேர்மையானவர்கள் : திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

டீசல் விலையில் மாற்றம் குறித்த அறிவித்தல்