சூடான செய்திகள் 1

கடுகண்ணாவா புத்தர் சிலை உடைப்பு-சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கடுகண்ணாவா, திதுருவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றை உடைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த எம்.அஷ்பர் என்ற நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே மாவனெல்லை பிரதேசத்தில் காணப்படும் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை 4 மணியளவில் திதுருவத்தை பிரதேசத்தில் இருவர் புத்தர் சிலையைச் சேதமாக்குவதை அவதானித்த அப்பிரதேச இளைஞர் ஒருவர், குறித்த இருவரையும் மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அதில் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடியவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவனெல்லை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

Related posts

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

இன்றும் கடல் கொந்தளிப்பு