உள்நாடு

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்களை மாத்திரம் விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு