உள்நாடு

கடல்வழியாக நுழைந்த இந்தியர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் – குருநகர் பகுதிக்கு பிரவேசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தமிழகம் – இராமேஸ்வரம் பகுதியில் 2 பெண்களும், 2 சிறுவர்களும் கடந்த 7 ஆம் திகதி நாட்டுக்குள் இவ்வாறு பிரவேசித்துள்ளனர்.

படகு ஊடாக மன்னார் பகுதிக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இன்று (13) பி.சி.ஆர் பரிசோனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதார தரப்பினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

Related posts

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை