வகைப்படுத்தப்படாத

கடல் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் கடல் பாதுகாப்பு அலுவல்கள் வசதிகளை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இந்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் கீழ் இந்துமா சமுத்திரத்திற்கு அருகாமையில் செல்லும் நெதர்லாந்து வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகளை இலங்கை கடற்படை செய்துதவும்.

இதன்போது நெதர்லாந்து அரசாங்கத்தின் சார்பில் இலங்கையில் உள்ள தூதுவர் ஜோன்னி டூர்னிவாட் (Joanne Doornewaad) மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts

வாக்கு கேட்டதால் 180 பொலிசாருக்கு இடமாற்றம்

அணுவாயுதம் தொடர்பான இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்களை ஈரான் மறுத்துள்ளது

மலையகத்தில் கடும் காற்று