உள்நாடு

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் உள்ள இடத்தினை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரியினை இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MT New Diamond தற்போது இலங்கை கடற்பரப்பில் இருந்து 50 கடல்மைல் தொலைவில் கப்பல் நிலை கொண்டுள்ளது.

கப்பலில் இருந்து மைல் இரண்டிற்கு கருப்பு நிற எண்ணெய் கசிவு போன்ற படலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் குறித்த நீர் மாதிரியானது அரச இரசாய பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப் பெரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

80,000 க்கும் அதிகமானவர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு!