வகைப்படுத்தப்படாத

கடல் கொந்தளிப்புடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டை சுற்றி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக  திருகோணமலை  வரை மற்றும ் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை வௌியிட்டு அந்த நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கடல் சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தொடரும் மழை

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது