கிசு கிசு

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம்… (VIDEO)

ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் திகதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

மேற்படி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் செல்வதுப் போன்று காட்சி அளித்தது. இதனை பார்த்து வியந்தேன். உடனடியாக காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன்’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம் காண்போரை பிரமிப்படையச் செய்துள்ளது. மேகக் கூட்டங்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும்போது பல்வேறு கோணத்தில் பயணிக்கும்.

இதன்படி காற்றின் திசைக்கேற்ப மேகங்கள் கூடும். இதனால் இதுப்போன்று அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் வகையில் இயற்கையாக மேகங்கள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஒரு துளி மனித இரத்தத்தை சேர்த்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ [PHOTOS]

தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?