வகைப்படுத்தப்படாத

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

(UTV|COLOMBO)-நடுக் கடலில் மீன்பிடிக்க வந்த நிலையில், அலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இலங்கை மீனவரை இராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் மரியதா என்பவர் அண்டனுடன் இணைந்து இணைந்து பைபர் படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இராட்சத அலை ஒன்று அவர்களின் படகைத் தாக்கியதில், படகு கவிழ்ந்து இருவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

இந்தநிலையில், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி அடிமை என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வர மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மரியதாஸை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர் என, நக்கீரன் செய்திகள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், மண்டபம் மீனவ குழும பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மரியதாஸ் நடந்ததை விவரித்துள்ளார். மேலும், நீரில் மூழ்கிய அண்டன் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துவிட்டதாகவும் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எமனாக வந்த பாரவூர்தி:26 வயது இளைஞனும், 21 வயது யுவதியும் பரிதாபமாக பலி

New Zealand shock Australia to win Netball World Cup