உள்நாடுசூடான செய்திகள் 1

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி

(UTV|கொழும்பு)- வத்தளை திக்ஓவிட்ட கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடராபில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு

UPDATE- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை