அரசியல்உள்நாடு

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, பாராளுமன்றத்திற்குள் உள்ள சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்கு இலங்கை கடற்படையிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்கு இலங்கை கடற்படையின் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்க விரும்புவதாக வைஸ் அட்மிரல் பானகொட தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியில் இலங்கை கடற்படை ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவ சபாநாயகர் பாராட்டியதுடன், பாராளுமன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கடற்படை காட்டிய ஆர்வத்துக்கு நன்றி தெரிவித்தார்.

வினைத்திறனான மற்றும் செலவு குறைந்த திட்டங்களின் அமுலாக்கத்தை உறுதி செய்வதற்கு அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொவிட் உறுதி

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது