விளையாட்டு

கடனை பெற்றே மேற்கிந்திய வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது

(UTV |  மேற்கிந்திய தீவுகள்) – கொரோனா காரணமாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் 144 கோடி ரூபாய் கடன் தொகைக்கு ஆளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அந்த அணியின் வீரர்களுக்கும் இடையே ஊதியம் தொடர்பாக சில ஆண்டுகளாக புகைச்சல் இருந்த நிலையில் இப்போது நிலைமை ஓரளவு சரியாகியுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக வாரியம் மீண்டும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கிரிட் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ‘கொரோனா காரணமாக பணப்புழக்கம் இல்லாத நிலையில் வெளியில் கடன் வாங்கிதான் வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் 50 சதவீதம் சம்பளம் கொடுத்தோம். இப்போது 2 கோடி அமெரிக்க டாலர் கடன் இருக்கிறது. எங்கள் தேவை இல்லாத செலவுகளைக் குறைத்துள்ளோம். வரும் 2 ஆண்டுகளில் எங்கள் கடன் மூன்றில் ஒரு பங்கு குறையும்’ என அவர் கூறியுள்ளார்.

Related posts

Copa Del Rey : பார்சிலோனா கிண்ணத்தினை கைப்பற்றியது

குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்