உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி குளியாபிட்டியவில் 85 பேரும், மத்தளையில் 78 பேரும், கண்டியில் 66 பேரும், கம்பளையில் 64 பேரும், புத்தளத்தில் 50 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் நபர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Related posts

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு