உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இதுவரை 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை தாக்கியமைக்கு அரசை கடுமையாகும் சாடும் பொன்சேகா